சென்னையில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கைது

சென்னை எழும்பூரில் சாலையில் நடந்து சென்ற ரவுடி சத்யாவை வழிமறித்து வெட்டி படுகொலை செய்து குற்றவாளிகள் கைது

Update: 2023-09-12 04:00 GMT

பைல் படம்

புழல் பகுதியை சேர்ந்த ரவுடியை எழும்பூரில் கொலை செய்த நபர்களை கைது செய்த தனிப்படை போலீசார் மேலும் ஒரு சில நபர்களை  தேடி வருகின்றனர்.

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி புழல் சத்யா (22).என்பவர் நேற்று இரவு சென்னை எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள ஜுஸ் கடை அருகில் சாலையில் நடந்து சென்ற போது,அந்த வழியே இருசக்கர வாகனங்களில் திடீரென வந்த 4. பேர் கொண்ட கும்பல் சத்யாவை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்,

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து தனிப்படை போலீசார் மேற்படி நபர்களை அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த டேவிட் பிரசாத்,19, ரூபன்,35, அருண்குமார், 25,காவாங்கரை புழல் பகுதியை சேர்ந்த சரவணன் (எ) வெள்ளை சரவணன், வ/34, ஆகிய 4 நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 4 பட்டாக்கத்திகளையும் இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு எழும்பூர் காவல் நிலையத்தில் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் நாய் ரமேஷுடன் ஏற்பட்ட தகராறில் நாய் ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது சம்பவம் குறித்தும் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு ரவுடி சத்யா என்பவரைமேற்படி கொலை சம்பவத்தை திட்டமிட்டு  கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் சரித்திர பதிவிடு ஸ்கெட்ச் ரூபன் என்பவர் முக்கிய மூலகாரண குற்றவாளி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.தற்போது 4 குற்றவாளிகளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க அடைக்கப்பட்டார். மேலும் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவான குற்றவாளிகளை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நடந்து சென்ற ரவுடி சத்யாவை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Tags:    

Similar News