மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேர் மீட்பு

புழல் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேர் மீட்கப்பட்டார்.

Update: 2023-10-01 10:00 GMT

புழல் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 30பேர் போலீஸாரால் மீட்கப்பட்டனர் 

புழல் அருகே போதை மறுவாழ்வு மையத்தின் மீது எழுந்த புகார் காரணமாக  அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30பேரே போலீஸார் மீட்டு  அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் சித்திரவதை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மைய நிர்வாகியிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி பட்ட புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் தனியார் போதை மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இதனை சீமான் தமிழ்வேந்தன் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையங்களின் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார். மது, கஞ்சா, சிகெரெட், குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சித்திரவதை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. தொடர்ந்து மாநில மனநல மைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளிடம் விசாரணை நடத்தினர். போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் துன்புறுத்துவப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30பேர் மீட்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி சீமான்தமிழ்வேந்தனை புழல் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Tags:    

Similar News