நடந்து சென்ற ஆசிரியையிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிப்பு

Chain Snatching - திருவள்ளூர் அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிப்பு பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-25 03:45 GMT

Chain Snatching -திருவள்ளூர் மாவட்டம் பண்ணூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியமேரி (வயது57). இவர், திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் ஆரோக்கிய மேரி பள்ளியை முடித்து மாலை 5 மணியளவில், வீட்டுக்கு கிளம்பிய இவர், தன்னுடன் சக ஆசிரியை சோபியாவை அழைத்துக்கொண்டு பண்ணூர் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

பின்னர், அந்த ஆசிரியையை அங்கு விட்டுவிட்டு தனது வீட்டிற்கு ஆரோக்கியமேரி நடந்து சென்றபோது. அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். இதில், பின் சீட்டில் முகத்தை துணியால் மூடியிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே இறங்கிவந்து ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், செயினை விடாமல் பிடித்துக்கொண்டு, கூச்சலிட்டதால், கையில் கிடைத்த 3 சவரன் தங்க செயினுடன் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆரோக்கிய மேரி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மர்ம நபர்களை யார் என்று விசாரணை செய்து வருகின்றனர் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News