1.51 கோடி மதிப்பில் 16 மெகா வோல்ட் மின்மாற்றி : திருவள்ளூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
மணவாளநகர் துணை மின் நிலையத்தில் ரூ. 1.51 கோடி மதிப்பில் 16 மெகா வோல்ட் மின்மாற்றியை திருவள்ளூர் எம்எல்ஏ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து வெங்கத்தூர், மணவாளநகர், போளிவாக்கம், மேல் நல்லாத்தூர், கீழ் நல்லாத்தூர், மப்பேடு, உள்ளிட்ட 25 கிராமங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. மணவாளநகர் துணை நிலையத்தில் 10 மெகா வோல்ட் மின்மாற்றி மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அனைவருக்கும் மின் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து மின்பற்றாக்குறையை போக்க ரூ 1.51 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வோல்ட் மின்மாற்றியை 16 மெகா வோல்ட் மின் மாற்றியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதல்மைச்சர் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் எம்எல்ஏ. வி.ஜி ராஜேந்திரன் மணவாளநகர் துணை மின் நிலையத்தில் அமைக்கப்பட்ட 16 மெகா வோல்ட் மின் மாற்றியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன், திருவள்ளூர் தெற்கு உதவி செயற் பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ்,கஜேந்திரன்,தட்சிணாமூர்த்தி துணை மின் நிலைய உதவி பொறியாளர் ஜோதி, திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் அரி கிருஷ்ணன், கொப்பூர் திலீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.