புதிய பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆக்கிரமிப்பு அகற்றம்

வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2021-09-05 08:42 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம் பைல் படம்

திருவள்ளூர் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வேடங்கி நல்லூர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்  ஒதுக்கப்பட்டது.

அதில் ஓய்வுபெற்ற காவலர்கள் சங்கம் என்ற பெயர் பலகை, சங்கத்தின் அலுவலகம், கொடிகம்பம் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி வருவாய் துறையினர் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் இன்று இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்,

அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர். மேலும் அரசு நிலத்தை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பெயர் பலகையும் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News