ஆரணியில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் காவல்துறை விசாரணை

பொன்னேரி அருகே ஆடுகளின் கால்களை கட்டி லாவகமாக திருடிய மர்ம கும்பலை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை

Update: 2022-07-18 11:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் ரகுமான்கான் என்பவர் ஆடு மற்றும் கோழிகளை அடைத்து வைக்கும் பட்டி வைத்துள்ளார். இறைச்சிக்காக மொத்தமாக ஆடு, கோழிகளை வாங்கி வந்து பட்டியில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்.

இவர் தமது கடைக்கு வந்தபோது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் 12 ஆடுகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகுமான்கான் ஆரணி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிருந்து ஆடுகளை திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவன் ஆட்டுப்பட்டியில் உள்ளே சென்று ஆடுகளை பிடித்து கொடூரமாக ஆட்டின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டு ஆட்டின் கால்களை கட்டி வைக்கிறான். மற்றொரு நபர் காரை தயாராக வைத்துள்ளான். கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ஆடுகளை ஒருவன் ஒவ்வொன்றாக கொண்டு சென்று காரில் வைத்து விட்டு கடையின் ஷட்டரை மீண்டும் இறக்கிவிட்டு காரில் தப்பி செல்கின்றனர். காரில் வந்து ஆடுகளை திருடி செல்லும் காட்சிகளை கொண்டு ஆடு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News