சிறுணியம் கிராமத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

சோழவரம் அருகே சிறுணியம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-24 06:00 GMT

சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தில் எம்ஜிஆர் நினைவாஞ்சலி. மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் பங்கேற்று மலர் தூவி மரியாதை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36.வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தில் எம்ஜிஆர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

எம்ஜிஆர் புகழ் பரப்பும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.சோழவரம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் விஜயகுமார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் பங்கேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து 300.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலாஜி,பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1972 ஆம் ஆண்டு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" கட்சியை நிறுவிய எம்.ஜி.ஆர், 1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த நடிகரும், அரசியல்வாதியும் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த சமூக சேவகரும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகப் பல்வேறு பணிகளைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் 1987 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் தேதி காலமானார். இவரது மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டில் அவரது ரசிகர்கள் அவரது நினைவாகப் பல நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு முக்கியமான நபர். இவர் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவர் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் ஒரு அற்புதமான தலைவராக நினைவு கூறப்படுகிறார்.

Tags:    

Similar News