ஆவடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி..!
ஆவடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை ஆவடி எம்எல்ஏ நாசர் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை ஊராட்சி, பட்டாபிராம், கோபாலபுரம், கவரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் மற்றும் கவரபாளையம் பகுதிகளில் பகுதி கழக செயலாளர் நாராயண பிரசாத் ஏற்பாட்டில் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட 1500.க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆவடி நாசர் வழங்கினார்.
இதன் பின் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் 10.8 கோடி செலவில் 2196மீ புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி நாசர் பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.