ஆவடி 37வது வார்டில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஆவடி 37வது வார்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.;

Update: 2021-06-25 14:32 GMT

ஆவடி 37 வது வார்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பால்வளத் துறை அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி சாமு நாசர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி வடக்கு நகர 37வது வார்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில்  திமுக வடக்கு தொகுதி பொறுப்பாளர் நாராயண பிரசாத் வட்டக் கழக செயலாளர் பார்த்திபன் மற்றும் வார்டு நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News