ஆவடி: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்!
ஆவடியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்.;
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சார்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலையோரவாசிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆவடி தமுமுக மற்றும் மமக சார்பாக ஆவடி பகுதியில் உணவின்றி தவிக்கும் சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தயார் செய்து வினியோகம் செய்தனர்.