ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!

ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

Update: 2021-06-10 09:43 GMT
திருநங்கைகளுக்கான ரூ.2000 நிவாரண நிதியை அமைச்சர் நாசர் வழங்குகிறார்.

தமிகத்தில் கொரோனா ஊராடங்கால் வாழ்வாதாரம் இழந்த  திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பால்வளதுறை அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்று ஆவடி தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதவி தொகையினை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் நாசர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பெயரை மாற்றி அதனை அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனையும் மிஞ்சும் வகையில் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதி உதவியினை வழங்கி அவர்களின் முன்னற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இனி வரும் காலங்களில் தற்போதுள்ள அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் நலனை உயர்த்தும் வகையில் செயல்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News