ஆவடி: உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்!
ஆவடி அருகே உணவகத்தில் கூடிய பொது மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.;
உணவகத்தில் கொரோனா தொற்றை மறந்து கூடிய கூட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உணவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு கொள்ளாமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.