ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!

ஆவடியில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய வழக்கில் உறவினர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-06-07 03:13 GMT

ஆவடி காவல் நிலையம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (56). இவர் வேலூரில் தங்கியிருந்து வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (51). திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் செவிலியருக்கு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது. 

கடந்த மாதம் தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வேலூரை சேர்ந்த தனது சகோதரியின் மகள்கள் உமா மகேஸ்வரி, பூர்ணிமா ஆகியோரை உதவிக்கு அழைத்து இருந்தார். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 10ந் தேதி முதல் 29ந்தேதி வரை வீட்டில் தங்கியிருந்தனர். உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனலட்சுமி வீட்டு அலமாரியில் இருந்த நகைகளை சரிபார்த்து உள்ளார். அப்போது அங்கு இருந்த 30பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரமும் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, அவர் தனது செல்போனில் இருந்த "கூகுள் பே" சரி பார்த்து உள்ளார். அப்போது அதிலிருந்து ரூ.2ஆயிரம், ரூ.3ஆயிரம் என அவ்வப்போது பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பணம் உமாமகேஸ்வரியின் கணவர் ஆனந்தன் வங்கி கணக்கில் சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, நகைகளையும், பணத்தையும் உமாமகேஸ்வரி, பூர்ணிமா ஆகியோர் சேர்ந்து தான் திருடி இருப்பது தனலட்சுமிக்கு உறுதியாக தெரியவந்தது. இது குறித்து தனலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள உமாமகேஸ்வரி பூர்ணிமா இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News