ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆவடி மாநகராட்சி சார்பில் வார்டு வாரியாக மளிகை பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மளிகை பொருட்கள் விற்பனை வாகனத்தை அமைச்சர் சா.மு.நாசர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல் திருமுல்லைவாயலில் உள்ள தகன எரிமேடையில் போர் வெல் அமைக்கும் பணியையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.