டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் 'ஆப்சென்ட்'

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 812 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 8 தேர்வு எழுதினர்.

Update: 2022-09-12 05:55 GMT

திருப்பூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 தேர்வு நடந்தது.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று, குரூப்-8 தேர்வில் கிரேடு-4 செயல் அலுவலர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

மொத்தம் 1,734 பேர் தேர்வு எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 922 பேர் தேர்வு எழுத வரவில்லை. 812 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இதன்படி 46.83 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

மாவட்ட கல்வித்துறை சார்பில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News