உலக சுற்றுச்சூழல் தினம்! திருநெல்வேலியில் மாரத்தான்!

உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை மூலம் நிறைய கொண்டாட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Update: 2023-06-04 12:31 GMT

உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை மூலம் நிறைய கொண்டாட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

உலக சுற்று சூழல் தினமான ஜூன் 5ம் தேதியை முன்னிட்டு திருநெல்வேலியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதன்மூலம் மக்களுக்கு சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியைப் பாதுகாக்கவும், மாவட்ட மக்கள் அனைவரும் நம் மாவட்ட மண்ணைப் பாதுகாக்கவும் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கூடிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த மாரத்தானில் மாவட்டம் முழுவதுமிருந்த பல்வேறு இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் துவங்கி, ஆயுதப்படை மைதானம், பாளை பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

சுமார் 5 கிமீ தூரத்துக்கு நடைபெற்ற இந்த மாரத்தானில் ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் கலந்துகொண்டனர். தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. முதல் இடத்தைப் பிடித்தவருக்கு 5 ஆயிரம் ரூபாயும் 2 வது இடத்தைப் பிடித்தவருக்கு 4 ஆயிரம் ரூபாயும் 3வது இடத்தைப் பிடித்தவருக்கு 3 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்த வீரர்களுக்கு ரூ 200 ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Tags:    

Similar News