உலக பூமி தினம்: நெல்லையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Update: 2022-04-22 12:45 GMT

நெல்லையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு இணைந்து மாவட்டத்தில் உலக பூமி தினம், மீண்டும் மஞ்சப்பை மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அலுவலர்கள், சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உலக பூமிதின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், சிப்காட் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சள் பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:- இப்பிரச்சார வாகனமானது திருநெல்வேலி மாநகரப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான, பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு புகைவண்டி நிலையம், வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகள், கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு, துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மாசு இல்லா நெல்லையை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணி நாளை பாபநாசத்திலிருந்து துவங்கப்படவுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் ஒருமுறை பயன்படுத்தும் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி ஏற்க வேண்டும். மஞ்சப்பை இயக்கம் அனைத்துதரப்பு மக்களுக்கு தெரிய வேண்டும் பொருட்கள் வாங்க துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும். தாமிரபரணி நதி கரையோரங்களில் மாணவ,மாணவியர்கள், தன்னார்வலர்கள் மூலம் சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இன்று தொடங்கப்படும் இந்த விழிப்புணர்வு வாகனம் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் எல்லா இடங்களிலும் சுற்றுசுழல்குறித்தும், மஞ்சள்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ. ரொமால்ட் டெரிக் பிண்டோ, சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பின் தலைவர் அந்தோணிதாமஸ், துணைத்தலைவர் விஜயகுமார், பொருளாளர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News