நெல்லையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் தின பெண்கள் கருத்தரங்கு

உலக மகளிர் தினத்தையொட்டி பர்கிட் மாநகரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-03-10 07:03 GMT

உலக மகளிர் தினத்தையொட்டி பர்கிட் மாநகரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பர்கிட்மாநகரில் விமன் இந்தியா மூமென்ட் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக பாசிசத்தை தோற்கடிப்போம் பெண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

பர்கிட்மாநகரம் நகர தலைவர் நௌரோஸ்பானு தலைமை தாங்கினார். நகர செயலாளர் வஹிதா பானு வரவேற்புரை ஆற்றினார், எஸ்டிபிஐ கட்சி பர்கிட்மாநகர நகர தலைவர் ஜுபைர் முகம்மது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் யாசின், நகர நிர்வாகிகள் முகம்மது அலி ஜின்னா, அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தனர். விமன் இந்தியா மூமென்ட் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிருக்கான தினத்தை அறிவித்து நூறு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், உரிமைகள் மறுப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமை அளிக்கும் விசயத்தில் நமது நாடு பின்தங்கி இருப்பதை கள நிகழ்வுகளும், புள்ளி விவரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள், பாலின பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும் பெண்கள் பலம் பெறவும், சமூக நீதிக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெறவும், இத்தகைய பாசிச சக்திகளின் சதிச்செயலை முறியடித்து, பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதிச்செய்ய வேண்டும். அதற்காக இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நகர நிர்வாகி செய்யது அலி பாத்திமா நன்றி உரை ஆற்றினர்.

Tags:    

Similar News