96 வயது பாட்டியை காப்பாற்றிய தன்னார்வலர்கள்

R-SOYA வின் தன்னார்வலர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 96 வயது பாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Update: 2021-04-26 17:31 GMT

நெல்லை டவுண் சாப்டர் மேல் நிலைப் பள்ளி அருகில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் ரோட்டோரம் இருந்த 96 வயது மதிக்கத்தக்க பாட்டி படுத்துகிடந்ததை பார்த்த திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக R-SOYA வை தொடர்பு கொண்டு பாட்டியை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரியதன் அடிப்படையில் R-SOYA தன்னார்வலர்களுடன் சோயா சரவணன், சோயா மாரிமுத்து, கோல்டன் கணேஷ் இடத்திற்கு சென்று பாட்டியை மீட்டு 108 வாகனத்தின் மூலமாக பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பாட்டியை கவனிக்க தன்னார்வலர் மாரியம்மாள் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன் பாட்டியை பாளை சாந்திநகரில் இருந்த அவரின் குடும்பத்தினர்கள் இங்குவந்து விட்டு சென்றதாக கூறி பாட்டி அழுதார். வெயிலிலும் பசியிலும் கிடப்பதை பலரும் பார்த்தும் பார்க்காமல் சென்றபோது என்னை மனுஷியாக நினைத்து உதவிய உங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிக்கும் நன்றி என கையெடுத்து கும்பிட்டார்.

Tags:    

Similar News