நெல்லையில் முன்னாள் தமிழக முதல்வருக்கு நினைவஞ்சலி

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான பக்தவச்சலத்தின் 35வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

Update: 2022-02-15 15:50 GMT

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான பெரியவர் மீ.பக்தவச்சலத்தின்  35வது ஆண்டு நினைவஞ்சலி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நெல்லையில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்விற்கு தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா தலைமை ஏற்றார்.

பெரியவர் பக்தவச்சலம் அறக்கட்டளை புரவலர் சீவலப்பேரி கந்தசாமி பிள்ளை, கவிஞர் சுப்பையா முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனரும் துணை ஆட்சியர்(ப நி) சுப்பிரமணியன் , பெரியவர் படத்திற்கு மாலை அணிவித்தார். மனோன்மணியம் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கவிபாண்டியனும் இந்திய விடுதலைக்கும், தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் அமைச்சர் பெருமகனாகவும், பெருந்தலைவருக்கு பின் 4 ஆண்டுகள் முதல்வராகவும் தமிழகத்திற்கு சிறந்த தொண்டாற்றியதையும் , வருங்கால தலைமுறையினருக்கு கல்வி மூலம் அன்னாரது வாழ்க்கை வரலாறு கொண்டு செல்லவேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.விழாவில் பொருணை காஜா மைதீன், ஆசிரியர் சுப்ரமணியன், இந்து பள்ளி குழு உறுப்பினர் வெள்ளைசாமி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாட்டை அறக்கட்டளை அறங்காவலர் ச.சண்முகவேலன் செய்திருந்தார்.

Tags:    

Similar News