நெல்லையில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு வாகனம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

பாரம்பரிய உணவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் விற்பனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-19 10:46 GMT

பாரம்பரிய உணவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சரிவிகித உணவுத் திட்டம் மற்றும் நெல்லை மாவட்ட உணவுத்துறை சார்பில் பாரம்பரிய உணவு பாதுகாப்பு விழா நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாரம்பரிய உணவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சரிவிகித உணவுத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையில் இருந்து பயோ டீசல் தயாரிப்பு, பாரம்பரிய உணவு தயாரிப்பு என பல்வேறு பணிகள் நடக்கிறது. இதில் பாரம்பரிய உணவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேழ்வரகு, கம்பு , சோளம் , தானிய பயிர்கள் ஆகிவற்றால் செய்யப்பட்ட உணவுகள் விற்கப்படுகிறது. பாரம்பரிய உணவை மக்கள் பயன்படுத்தும் வகையில் மகளிர் சுயுஉதவிக்குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அரசு ஊழியர்கள் சமய நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News