திருநெல்வேலி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாக்கப்படும்: மேயர் சரவணன்

மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தின் மூலம் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று குறைகளை நேரில் அறிந்து தீர்க்கப்படும்-மேயர் சரவணன்.

Update: 2022-06-30 14:26 GMT

நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

நெல்லை மாநகராட்சியில் மக்களைத் தேடி மாநகராட்சி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும், 6 மாத காலத்திற்குள் நமது மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாக்கப்படும் மேலும் மாநகராட்சி வளாகத்தில் தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் வாசித்து கூட்டம் தொடங்கப்பட்டது, கூட்டம் தொடங்கியதும் மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில் - மக்களைத்தேடி மேயர் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்கள் குறைகளை நேரில் அறிந்து தீர்கப்படும், பிறப்பு , இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உடனடியாக வழங்கப்படும்.

மேலும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டு 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 4 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும், அதுபோன்று மாநகராட்சி சார்பில் சொந்தமாக பெட்ரோல் பங்கும் விரைவில் அமைக்கப்பட உள்ளது, மாநகராட்சி வளாகத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடி தண்ணீர் பிரட்சனை, தெருவிளக்கு, சாலை வசதிகள், வாருகால் பிரச்சனை குறித்து பேசினர். பின்னர் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News