நடமாடும் காய்கனி விற்பனை-விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு -நெல்லை மாநகராட்சி

நடமாடும் காய்கனி விற்பனை சேவை செய்ய விரும்புவோர் உதவி ஆணையரை அணுகி அனுமதி பெறலாம். நெல்லை மாநகராட்சி ஆணையர் தகவல்

Update: 2021-05-26 13:58 GMT

திருநெல்வேலி மாநகராட்சியில் 200 நடமாடும் காய்கனி விற்பனை வாகனத்தைத் தொடர்ந்து தள்ளுவண்டி மூலமாக "நடமாடும் காய்கனி விற்பனை" சேவை செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையரை அணுகி அனுமதி பெறலாம்.என மநகராட்சி செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கொரோனா" வைரஸ் காய்ச்சலினை முற்றிலும் தடுப்பதற்கு,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற சூழலில், 24.05.2021 முதல் 31.05.2021 வரையிலான காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கினை அறிவித்துள்ளார். இவ்வூரடங்கு காலத்தில், பொதுமக்களின் வசதிக்காக,சமூக விலகலைப் பின்பற்றிடும் விதமாகவும், மாநகரின் அனைத்துப்பகுதிகளிலும்"நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள்" மூலமாக செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, இவ்வாணையினைப் பின்பற்றிடும் விதமாக, பொதுமக்கள் அதிகமாகக் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைத் தீவரமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு, பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் காய்கனி பொருட்களை வீடு தேடி வந்து விற்பனை செய்திடும் பொருட்டு, மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 200 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

அத்துடன் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பலசரக்கு பொருட்களை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அங்காடிகள் பற்றிய விபரங்கள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக காய்கனி விற்பனையின் சேவையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை தள்ளுவண்டி மூலமாகவும், காய்கனி விற்பனை செய்திட வேண்டி மாநகராட்சி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

எனவே, தள்ளுவண்டி உரிமையாளர்கள் நடமாடும் காய்கனி விற்பனை சேவையினை செய்திட விரும்புவோர்கள் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்களை அணுகி, அதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News