திருநெல்வேலி கலெக்டரை சந்திக்க கட்டு கட்டாக பணத்துடன் வந்த விவசாயியால் பரபரப்பு

Tirunelveli Latest News -திருநெல்வேலி கலெக்டரை சந்திக்க கட்டுகட்டாக பணத்துடன் கலெக்டர் அலுவலம் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-10 10:35 GMT

Tirunelveli Latest News -நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் பொதுமக்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை, பிரச்சினைகள் குறித்து மனு கொடுப்பது வழக்கம். இந்த மனுக்கள் மீது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுத்து  தீர்வு காண்பார்கள். அதனால் திங்கள் கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். சில நேரங்களில் நீண்டு வரிசையில் நின்று பொதுமக்கள் மனு கொடுப்பார்கள். இந்த திங்கள் கிழமை அன்று வழக்கம் போல் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் கையில் கட்டு கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு தான் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த விவசாயி சிசில் என்பது தெரியவந்தது. அவர் வந்துள்ளது பற்றி கலெக்டர் அலுவல அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

விவசாயி சிசிலுக்கு சொந்தமான ஒன்பதரை  ஏக்கர் நிலம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னார்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து அங்குள்ள கனரா வங்கியில் கடந்த 2005ல் 7.40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை செலுத்த பத்து ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் சிசில் கடனை முழுமையாக திருப்பி செலுத்ததால் வங்கி தரப்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் வழங்கியும் சிசில் கடனை செலுத்தாததால் ஒரு கட்டத்தில் வட்டி இல்லாமல் வாங்கிய கடனை மட்டும் செலுத்தும்படியும் வாங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளார். இதற்கிடையில் வாங்கி தரப்பில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுபெற்றதை தொடர்ந்து சொத்துகளை ஏலம் விடப் போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை கேட்டு பதறிப் போன சிசில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பின்னர் வங்கியில் சென்று கேட்டபோது தங்களுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது இனி தங்களால் எதுவும் செய்ய முடியாது மண்டல அலுவலகத்தில் சென்று கேளுங்கள் என தெரிவித்துள்ளனர். தனது நிலத்தை மீட்பதற்காக சிசில் கடந்த ஒரு மாதமாக அங்கு இங்கும் அலைந்து திரிந்த நிலையில் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது வங்கியில் செலுத்த வேண்டிய 7 லட்சம் ரூபாய் பணத்தை ஆட்சியரிடம் கொடுத்து நிலத்தை மீட்டு தரும்படி கேட்பதற்காக கையில் கட்டு கட்டாக பணத்தையும் கொண்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி வங்கிக்கு, அதிகாரிகள் தகவல் தெரிிவித்தனர்.

 விவசாயி சிசில் இதுவரை அவர் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் 6.6 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், பல முறை அவகாசம் கொடுத்தும் அந்த பணத்தை சிசில் செலுத்தவில்லை வட்டியை கழித்து அசல் தொகையை மட்டும் செலுத்த கூறியும் அதையும் சிசில் செலுத்தவில்லை என்றும் வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கலெக்டர் அலுவல அதிகாரிகள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். விவசாயி சிசில் பிரச்சினை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் தினத்தன்று விவசாயி கையில் கட்டு கட்டாக பணத்துடன் வந்து சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News