வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 12:30 GMT

நெல்லையில் பல்வேறு பணிகளை  மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளருமான அபூர்வா ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த முறை மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் தண்ணீர் விரைவாக வடிந்து விடும் என நெல்லையில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளருமான அபூர்வா  தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் இன்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

இதன் அடிப்படையில் பாளையங்கோட்டை வ உ சி மைதானம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள. உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

பின்னர் அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றவர் அங்குள்ள ஹாக்கி மைதானம், தடகள போட்டி மைதானம், மற்றும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவைகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு மழையின் போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழைநீர் உடனடியாக வடிந்து விடும். சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ உ சி மைதானம் , பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. வ உ சி மைதானத்தை பொருத்தவரை ஒரு தனி விளையாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அளவில் இருக்கைகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்த மைதானத்தில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சந்திப்பு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கனிமவளம் அள் ளப்பட்டது தொடர்பாக வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News