ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை பயிற்சி

நெல்லையில் ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை பயிற்சி.

Update: 2022-04-13 01:44 GMT

நெல்லையில் ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி பேராசிரியர் சிறப்பு செய்முறை பயிற்சி அளித்தார்.

நெல்லையில் ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் இருந்து வந்த ஐஐடி பேராசிரியர் சிறப்பு செய்முறை பயிற்சி அளித்தார்.

நெல்லை மாவட்டத்தில் 13 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 21 அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டில் ஐஐடி மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியினை பெற்று வருகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சி பெற்று வரும் 21 மாணவர்களையும் இன்று நெல்லை கொக்கிரகுளம் அரசு அறிவியல் மையத்தில் வைத்து சென்னை ஐஐடியின் பேராசிரியரும், பயிற்சியாளருமான மது பாலாஜி நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் மாணவர்களுக்கு ஐஐடி கல்வி முறை குறித்து பல்வேறு செய்முறை பயிற்சியினை கற்றுக் கொடுத்தார். குறிப்பாக நம் முன்னோர்கள் காலத்தில் சாதாரண நூலை கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டமைக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்தார். அப்போது மாணவர்கள் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர். ஏற்கனவே இம்மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி பார்த்து அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து சமீபத்தில் இம்மாணவர்கள் 21 பேரும் ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் விமானத்தில் சென்னை சென்று அங்குள்ள ஐஐடியில் நேரடியாக பயிற்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஐடி பயிற்சியாளர் மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்திருப்பது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News