ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்ட 6வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

திருநெல்வேலி மாவட்ட 6வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பெரிய பெருமாள் சுவாமி தரிசனத்துடன் இன்று பிரச்சாரத்தை துவங்கினார்.

Update: 2021-09-27 09:04 GMT

அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பெரியபெருமாள் சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுதல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இறுதிகட்ட வேட்பாளர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் போன்ற பதவிகளுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரச்சாரத்தையும் துவங்கினர்.

இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பெரியபெருமாள் தனது பிரச்சாரத்தை இன்று பாளையங்கோட்டை அடுத்துள்ள சீவலப்பேரியில் உள்ள பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ராக்கப்பன் ஆகியோருக்கு ஆதரவாக நாங்குநேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், பாளையங்கோட்டை வடக்கு பகுதி ஒன்றிய செயலாளர்  மருதூர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

அப்போது பொதுமக்களிடம் அனைவரும் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அவர்களை வெற்றி பெறச் செய்தால் தங்களுடைய பகுதியில் என்ன பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் பிரச்சார வாகனத்தில்  ஒலிபெருக்கி மூலம் தலைமை கழக பேச்சாளர் காந்திமதிநாதன் அதிமுகவுக்கு வாக்குகளை சேகரித்தார். அல்போன்ஸ் ராணி, விஜயவேல், மணிவண்ணன், சீவலப்பேரி கிளைச் செயலாளர்கள் லட்சுமணன், துரை உள்ளிட்டோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரிக்க உடன் சென்றனர்.

Tags:    

Similar News