ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா பேரிடரில் பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் அரசு அறிவித்த 15,000 ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

Update: 2022-04-27 15:30 GMT

 நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள ஊராட்சி அலுவலர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து தரவேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியாற்றும் தூய்மை காவலர் தொடங்கி உதவி இயக்குனர் நிலைகளான அலுவலகங்கள் வரை நிலுவையாக உள்ள 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் முதல் ஊராட்சித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் வரை அனேகமானோர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஊராட்சி மேல்நிலைத் தொட்டியில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்ற ஊதியத்திலிருந்து 850 ரூபாய் ஊதியம் குறைவாக பெற வேண்டியுள்ளது. அதனை திருத்தி புதிய ஊதிய உயர்வு அரசாணை வெளியிட வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளர் களுக்கு அரசின் கருவூலத்தில் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் இறைத்தூதர்களாக போற்றப்படும் தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாக ஊராட்சி மூலம் வழங்கப்பட வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் கணினி உதவியாளர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் ரூபாய் 40,000 வழங்கிட வேண்டும். அவர்களை இளநிலை உதவியாளர் தலைமையின் கீழ் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி பணி அமைத்திட வேண்டும். கொரோனா பேரிடரில் பணியாற்றிய அனைத்து ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த 15,000 ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை கிராம ஊராட்சித் தலைவர்கள் பணி நியமனம் செய்து வருகின்றனர். அதனால் ஊராட்சி தலைவர் தவறுகளை உயர் அலுவலர்கள் சுட்டிக் காட்ட இயலாத நிலை உள்ளதால், வரும் காலங்களில் ஊராட்சி செயலர்கள் TNPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தை நடத்தினர்.

Tags:    

Similar News