நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா

நெல்லை சங்கர்நகர் பள்ளியில் சமய நல்லிணக்க விழாவில் பள்ளி மாணவிகளின் சர்வ சமயப் பாடல் எழுதப்பட்டு மாணவ, மாணவிகள் பாடினார்கள்.

Update: 2021-10-29 14:50 GMT

சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை தாழையூத்து, சங்கர்நகர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னாட்டு மதச் சுதந்திர கூட்டமைப்பு (ஐ.ஏ.ஆர்.எஃ), சர்வ சமய கூட்டமைப்பு இணைந்து சமய நல்லிணக்க விழா, தீபஒளி திருவிழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் உஷாராமன் தலைமை தாங்கினார். சர்வசமயத்தினர் திருவிளக்கு ஏற்றினர். சர்வசமய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன், இசையாசிரியர் ஜேசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா கலந்து கொண்டு தீபாவளி இனிப்புகள் மற்றும் புத்தகங்களை வழங்கி தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சர்வசமய கூட்டமைப்புத் தலைவர் வழக்கறிஞர் பிடி. சிதம்பரம் தொடக்க உரை ஆற்றினர். பரசமய கோளரி நாத ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மாநந்தா சரஸ்வதி சுவாமிகள், திருஇருதய சபை அருட்சகோதரர் எம்டி. ஜெபஸ்தியான், கம்பன் இலக்கிய சங்கப் பொருளாளர் எம்.ஏ. நசீர், சர்வ சமய கூட்டமைப்பு துணைத்தலைவர் மரியசூசை சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி துணை முதல்வர் கங்காமணி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவிகளின் சர்வ சமயப் பாடல் எழுதப்பட்டு, இசையமைத்து, இசையாசிரியா ஜேசுராஜன் தலைமையில் ஆசிரியப் பிரதீபா மற்றும் மாணவிகள் பாடல் நடைபெற்றது. மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News