கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வது நபரின் சடலம் மீட்பு

கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் சடலம் 8 நாட்களுக்குப் பின்பு மீட்பு

Update: 2022-05-22 17:00 GMT

நெல்லை கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த ஆறாவது நபரான லாரி டிரைவர் ராஜேந்திரன் சடலத்தை மீட்ட  பேரிடர் மீட்பு தீயணைப்புத்துறையினர்

நெல்லை கல்குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த ஆறாவது நபரான லாரி டிரைவர் ராஜேந்திரனை தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மீட்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு விபத்து ஏற்பட்டது. பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த இடிபாடுகளில் குவாரியில் பணியாற்றிய 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூவர் இந்த விபத்தில் பலியாகினர். பாறைகளுக்கிடையே சிக்கிய லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை மீட்கும் பணி 8-வது நாளாக இன்று நடைபெற்று வந்தது. அவரை மீட்க நான்காவது முறையாக சிறிய அளவிலான வெடிபொருளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்தனர்.

பாறைகளை அகற்றி லாரிக்கு உள்ளே உள்ள கேபினை பார்த்தபோது அதில் ராஜேந்திரனின் உடல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவரை மீட் டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த எட்டு தினங்களாக தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவு பெற்றது.

Tags:    

Similar News