ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 36 வது பட்டமளிப்பு விழா

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1188 மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் பட்டங்களை வழங்கினார்.

Update: 2022-04-22 11:17 GMT

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 36 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

நெல்லை மாநகரில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று 36 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவினை ராணி அண்ணா அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் மைதிலி தலைமை ஏற்று நடத்தினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் மற்றும் சமூகவியல் பேராசிரியருமான முனைவர் மருதகுட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றி இளங்கலை மாணவிகள் 977 பேருக்கும், முதுகலை மாணவிகள் 259 பேருக்கும், எம்.பில். மாணவிகள் 14 பேருக்கும் என மொத்தமாக 1188 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

மேலும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 40 மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இளநிலையில், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறை மாணவி வேலம்மாள் மற்றும் தாவரவியல் துறை மாணவி பிரியதர்ஷினி பல்கலைக்கழக அளவில் முதலிடத்தையும், மேலும் 4 மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News