நெல்லையில் பூக்களின் வரத்து அதிகரிப்பால், விலை குறைந்தது, மக்கள் மகிழ்ச்சி

நெல்லை பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-09-09 13:08 GMT
நெல்லையில் வரத்து அதிகரிப்பால், பூக்களின் விலை வீழ்ச்சியடைந்தது, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பூக்களின் விலை குறைந்தது விநாயகர் சதுர்த்தி தொடர் திருமண நிகழ்வுகள் இருந்த போதிலும் வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் நேற்றைய விலையை விட பாதியாக பூக்களின் விலை குறைந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சிறப்பு முகூர்த்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

அதிகபட்சமாக மல்லிகை பூ விலை கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. பிச்சி பூ, கனகாம்பரம் போன்ற பூக்களின் விலையும் 1500 ரூபாய் வரை விற்பனையானது.

கேந்தி, பச்சை போன்ற பூக்களின் விலையும் வழக்கத்தைவிட அதிகமாக விலையில் விற்பனை செய்யப்பட்டது. நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் போன்ற காரணங்களால் இன்று மேலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மல்லிகை பூ விலை 2,000 என நிர்ணயிக்கப்பட்டது.பூக்கள் வாங்க வந்த மக்களின் கூட்டம் குறைவாக இருந்ததாலும், பூக்களின் வரத்து அதிகரித்த காரணத்தினாலும் விலை குறையத் துவங்கியது. மல்லிகை பூ 700 முதல் 800 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

பிச்சிப்பூ, கனகாம்பரம் ஆகியவை 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கேந்தி, பச்சை போன்ற பூக்களும் நேற்று 200 ரூபாய் வரை விற்பனையானது.

இன்று 50 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாகவும் திருமண நாட்களில் கூடுதல் தொகைக்கு விற்கும் என எதிர்பார்த்து சந்தைக்கு கொண்டு வந்த நிலையில் மிகக் குறைந்த விலையே கிடைத்ததாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகரித்ததால் விற்பனை குறைவாக உள்ளதாலும், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News