மண் எடுப்பதற்கு அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

அன்புள்ள தொழிலுக்கு முன்னெடுப்பதற்கு அனுமதி அளிக்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானையுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

Update: 2022-04-11 09:02 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மண் பானைகள் உடன் வந்த மண்பாண்ட தொழிலாளர்கள்.

அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் இன்று கையில் மண்பானைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததனர்.

குறிப்பாக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். கனிமவளத்துறை பல்கலைக்கழகங்களில் மண் ஆய்வு சான்று பெறும்படி போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் தியாகராஜன் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மண் எடுக்க விடாமல் தடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், கனிமவளத் துறை அதிகாரிகளும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி எங்கள் தொழிலை வளரவிடாமல் தடுக்கின்றனர். நாங்கள் கொடுக்கும் மனுக்களை முறைப்படி பரிசீலனை செய்யவில்லை. தொழில் செய்ய முடியாமல் பெருமபாலான மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் கூடங்களை மூடி வருகின்றனர். எனவே அரசு கமிட்டி அமைத்து மண்பாண்ட தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News