நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-12 08:27 GMT

நெல்லை நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

நெல்லை நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் வருஷாபிஷேகம் இங்கு வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி சந்நிதி மகாமண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகாகுரு வலமாக இடத்துல பட்டு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் விமானத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News