நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழாவிற்காக கொடியேற்றம்

Today Temple News in Tamil - நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

Update: 2022-08-26 05:23 GMT

நெல்லையப்பர் கோவிலில் கொடி பட்டத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

Today Temple News in Tamil -தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடி பட்டம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடிபட்டதிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் மானூர் அம்பலத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News