நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் பாபநாசம் சேர்வலாறு அணையில் இருந்து 12480கன அடி தண்ணீர் திறப்பு. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

Update: 2021-11-29 04:33 GMT

நெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 12480 கன அடி திறப்பு. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

வடகிழக்கு பருவமழை துவங்கியதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. மேற்படி அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 12480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையிலிருந்தும் தாமிரபரணி ஆற்றில் 5700 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களிலும் நீர் முழுமையாக நிரம்பி உள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றின் இருகரையோரங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றின் நீர் வரத்து அதிகம் இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, புகைப்படங்கள் எடுக்கவோ ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் மழையின் காரணமாக ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களிடம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 0462 - 2501012 மற்றும் 0462 - 2501070 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதனை தவிர www.nellaineervalam.in/waterlogging என்ற இணையதளத்திலும் புகார்களை தெரிவிக்கலாம். என்று மாவட்ட நீர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News