புதுப்பொலிவுடன் திருநெல்வேலி ரத்னா திரையரங்கம்! இப்ப எப்படி இருக்கு பாருங்க!

Rathna Theatre Online Booking-புதிதாக திறக்கப்பட்டுள்ள நெல்லை ரத்னா திரையரங்கில் படம் பார்க்க மக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். திருநெல்வேலி மாநகர மக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.

Update: 2023-04-30 12:08 GMT

Rathna Theatre Online Booking

Rathna Theatre Online Booking

தமிழகத்தின் பழமையான திரையரங்குகளில் ஒன்று திருநெல்வேலி மாநகரில் இருக்கும் நெல்லை ஸ்ரீ ரத்னை திரையரங்கம். இது 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அவ்வப்போது புணரமைப்பு செய்யப்பட்டுக் கொண்டே ரசிகர்களின் பேராதரவைப் பெற்று தன்னையும் தன்னுடைய மினுமினுப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இப்போது நெல்லை ரத்னா திரையரங்கம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கடந்த 2 மாதங்களாக இந்த திரையரங்கில் வேலைகள் நடைபெற்று வந்தது. மற்ற புதிய திரையரங்குகளுக்கு போட்டியாக பல புதிய விசயங்களையும் இணைத்து புதுப் பொலிவுடன் மினுமினுக்கும் வகையில் அழகிய திரையரங்கமாக மாற்றி இப்போது பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இந்த திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்து வருகின்றனர்.

நெல்லை மக்களுக்கு திரையரங்கு என்றால் சந்திப்பு ராம் முத்துராம் திரையரங்கமாகவே இருந்தது. ஆனால் புதிதாக மேலப்பாளையத்தில் அலங்கார் திரையரங்கமும், வண்ணாரப்பேட்டையில் பிஎஸ்எஸ் திரையரங்கமும் புதிதாக திறக்கப்பட்டது. இதனால் ரத்னா திரையரங்குக்கு மக்கள் முக்கியமாக இளைஞர்கள் வருவது குறைந்தது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் திரையரங்க ஊழியர்கள் பணமின்றி தவித்த நிலையில், அவர்களை வேலையிலிருந்து அனுப்ப வழியில்லாமலும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் பல திரையரங்க உரிமையாளர்கள் திணறினர். இதனிடையே விக்ரம் திரைப்படம் வந்து கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதனையடுத்து வந்த பொன்னியின் செல்வன் படமும் மிகச் சிறந்த வசூலைத் தந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தையும், வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க உரிமையாளர்களுக்கு வாய்ப்பையும் வழங்கியது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள நெல்லை ரத்னா திரையரங்கில் படம் பார்க்க மக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். திருநெல்வேலி மாநகர மக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News