கரையிருப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறப்பு

கரையிருப்பு பகுதியில் குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை, மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

Update: 2022-04-24 09:00 GMT

புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை மேயர் பி.எம் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் ஆர்.எஸ்.வி நகர் கரையிருப்பு பகுதியில் ரூ 8இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை மேயர் பி.எம் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் ஆர்.எஸ்.வி நகர் கரையிருப்பு பகுதியில் ரூ 8இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் , துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

இவ்விழாவில் மாநகர பொறியாளர் (பொ) என்.நாராணயன். தச்சை மண்டல உதவி ஆணையாளர் லெனின், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் கிட்டாமணி மற்றும் ஒப்பந்தகாரர் மணிகண்டராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.வி நகரில் உள்ள பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News