முன்னீர்பள்ளம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை முயற்சியில் 5 பேர் கைது..!

நெல்லை - முன்னீர்பள்ளம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை முயற்சியில் 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2021-06-20 01:58 GMT

முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.02.2019 அன்று கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த ராஜாமணி, என்பவரை பாளையங்கோட்டை கால்வாய் அருகில் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ‌இதுதொடர்பாக இரு சமுதாயத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக 16.6.2021 அன்று பாலமுருகேஷ் என்பவர் பாளையம் கால்வாயில் குளித்துவிட்டு அவரது நண்பருடன் மருதுநகர் பிள்ளையார் கோவில் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த எதிரிகளான முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்ற சங்கர்(22) ,அருணாச்சலம், மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பால முருகேஷிடம் டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பது போல் கேட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகேசனின் தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் முன்னீர்பள்ளம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் (பொறுப்பு) மேற்பார்வையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் தலைமறைவாக இருந்த எதிரிகளான கிழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கர் என்ற சங்கரலிங்கம் (22), அருணாச்சலம் (21), தருவை பகுதியைச் சேர்ந்த முத்து (20), தென் திருபுவனம் பகுதியை சேர்ந்த பேச்சிதுரை(22), மற்றும் கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த பாபு மணி என்ற சுப்பிரமணி ஆகியோரை 18.06.2021 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இவ்வழக்கில் அருண்பாண்டி, இசக்கிபாண்டி 17.06.2021 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 18.06.2021 அன்று சங்கரலிங்கம், அருணாச்சலம் முத்து பேச்சிதுரை,பாபு மணி என்ற சுப்பிரமணி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இதுவரை மொத்தம் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News