நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு

27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

Update: 2022-02-09 08:07 GMT

27 வது வார்டு டவுன் வ.உ.சி தெருவில் உள்ள மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி 27 வது வார்டில் பாஜக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 27 வது வார்டு டவுன் வ.உ.சி தெருவில் உள்ள மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் இளைஞரணி மாநில துணை தலைவர் வேல்.ஆறுமுகம் மானூர் ஒன்றிய தலைவர் அங்குராஜ், பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் நா.மணிகண்ட மகாதேவன், பாஜக திருநெல்வேலி முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோமதி சங்கர், வர்த்தகப் பிரிவு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் மார்க்கெட் கணேசன், நெசவாளர் பிரிவு மூர்த்தி, குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி, திருநெல்வேலி டவுண் உலகநாதன் வ உ சி தெரு நாதன் பாபு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மாரி, சுடலைமணி, மாரியப்பன், சிவலிங்கபெருமாள், காந்திநகர் மகேஷ் உட்பட பலர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News