நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 6730 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-07-17 06:15 GMT

நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்கள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 6730 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நடக்கிறது.இந்தத் தேர்வு நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஒரு மையங்களில் ஆக மொத்தம் 12 மையங்களில் பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் விஜயநாராயணன் ஐ என் எஸ் கேந்திர வித்யாலயா பள்ளி, நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டில் உள்ள தூய யோவான் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 மையங்களிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளியிலும் நீட் தேர்வு நடக்கிறது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 6730 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த மையங்களில் காலையிலிருந்து மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகின்றனர். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மையத்திற்குள் மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். கண்டிப்பாக மாணவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதும் போது ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரிஜினல் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். தேர்வு எழுதும் போது ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News