பேட்டை அரசினர் ஐடிஐ-யில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

நெல்லை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

Update: 2021-10-30 14:00 GMT

திருநெல்வேலி மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்கான சான்றிதழ்களை, ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம்,  பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்,  3 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 11 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்,  மூலம் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 33 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200 மாணவர்ளுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிப்பதற்கான சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

இதில், கடந்த வருடம் 548 பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றுள்ளனர். இம்முகாமில் கலந்து கொண்ட தொழிற்பழகுநர் பயிற்சியில், பயிற்சியாளர்களே ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது குறித்தும், தொழிற்பழகுநர் பயிற்சியின் நோக்கம் பற்றியும்,  வேலைவாய்ப்பில் தற்போதைய நிலவரம் குறித்து,  பல்வேறு நிறுவன உயர் அலுவலர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய இயக்குநர் வி.செல்வகுமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர் ரெ.ராஜகுமார், காசியானந்தா குக்கிங் ரேன்ஜஸ் பிரைவேட் லிமிட் நிர்வாக இயக்குநர் ஆ.அனந்தசேகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் லெட்சுமணன் (இராதாபுரம்), சு.மீனாட்சி, (அம்பாசமுத்திரம்) எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் ஞா.ஜெரினா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் சே.விஜயராகவன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆ.சொர்ணலதா, மாவட்ட திறன்பயிற்சி உதவி இயக்குநர் த.ஜார்ஜ் ப்ராங்களின் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News