பணகுடி அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

பணகுடி அருகிலுள்ள வடலிவிளையில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த மலைப்பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2021-11-16 11:30 GMT

பணகுடி அருகிலுள்ள வடலிவிளையில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த மலைப்பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர்.

பணகுடி அருகிலுள்ள  வடலிவிளையில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த  மலைப்பாம்பினை  வனத்துறையினர்  பிடித்தனர்.

பணகுடி அருகிலுள்ள வடலிவிளையை சேர்ந்தவர் ஜேக்கப் ஜெயக்குமார். இவர் சொந்தமாக அங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில்  சுற்றி வந்த போது கோழிகளின் சத்தம் அதிகமாக கேட்க துவங்கியதால்  பண்ணைக்குள் சென்று பார்த்தார். அப்போது  அங்கு  மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டார். உடனடியாக  திருக்குறுங்குடி  வனச் சரக அலுவலகத்திற்கு   தகவல் தெரிவிக்கவே  வனச்சரக அலுவலர் கார்த்திகேயன்  உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு கோழிப்பண்ணைக்குள் புகுந்து கோழிகளை விழுங்க  முயற்சித்த  சுமார்  8  அடி நீள மலைப்பாம்பினை லாவகமாக  பிடித்தனர். பின்னர்  அதனை  வள்ளியூர் வாழையாத்து  தொண்டு  பகுதியிலுள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

Tags:    

Similar News