நெல்லையில் வெள்ளம் பாதித்த இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆய்வு

நெல்லையில் 43 வது வார்டு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு.

Update: 2021-11-27 11:37 GMT

நெல்லையில் 43 வது வார்டு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் 43 வது வார்டு பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு.

நெல்லை மாவட்டத்தில் பருவ மழையின் காரணமாக தொடர்ந்து பெய்த மழையினால் நெல்லை மாநகர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

நேற்றும், இன்றும் மழை ஓய்ந்த நிலையிலும் மழைநீர் வடியாமல் ஒரு சில இடங்களில் தேங்கி கிடந்தன. இந்நிலையில் இன்று திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி டவுன் 43 வது வார்டு பகுதிகளில் உள்ள தெருக்களில் பாஜக தொண்டர்களுடன் மழைநீர் பாதிப்பு இடங்களை பார்வையிட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் உறுப்பினரிடம் தங்களது பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர் அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முதியோர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரிடம் உதவி கேட்டு வந்தார் அவருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்யும்படி கட்சித் தொண்டர்களிடம் அறிவுறுத்தினார். அப்போது ரோட்டில் மிதிவண்டியில் வியாபாரம் செய்தவரிடம் எம்எல்ஏ மற்றும் கட்சித் தொண்டர்கள் டீ வாங்கி அருந்தினார்கள்.

Tags:    

Similar News