சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று திருநெல்வேலியில் பேட்டி அளித்தார். போலி ஏஜென்டுகள் குறித்து பேசிய அவர் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-17 14:00 GMT

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று திருநெல்வேலியில் பேட்டி அளித்தார். போலி ஏஜென்டுகள் குறித்து பேசிய அவர் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனிலிருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் எந்த தடையும் இல்லாமலே தமிழக அரசின் உதவியால் படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது.

ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து வரும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவ மாணவியர்களுக்கு இங்கு எளிதில் சீட் கிடைப்பதில்லை. காரணம் இங்கு நீட் இருப்பதால் அந்த சிக்கல் உருவாகியுள்ளது. மத்திய அரசிடம் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களும் படிப்பைத் தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல பலரும் ஏஜென்டுகளை நாடுகிறார்கள். அந்த வகையில் அரசு அனுமதி பெற்ற பதிவு செய்யப்பட்டு ஏஜெண்ட்களாக 103 பேர் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி பல்வேறு விசயங்கள் பேசப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் வெளிநாடு அனுப்புவதாக கூறிக்கொண்டிருக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சட்டத்தின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

விஷ சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதி செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, அவர் பதிலளித்தார்.

திருமண நாள், பிறந்த நாள் எனக் கூறிக்கொண்டு வாழ்த்து பெற பலர் வருகிறார்கள். பொது வாழ்க்கையில் இருக்கும் பலருக்கும் இது சகஜமான ஒன்றுதான். அவர்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதை வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது.

சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News