நெல்லை: அரசு ஆதி திராவிடர் நல விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

அரசு ஆதி திராவிடர் நல விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-20 12:53 GMT

மானூரில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் அரசு ஆதி திராவிடர் நல விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் இன்று (2012.2021) ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, விடுதியில் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு தரமான உணவு தயாரித்து வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார். விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்க தயார் நிலையில் இருந்த உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தினை உறுதி செய்தார். மேலும் விடுதியில் பல்வேறு தேவையான வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தியாகராஜன், மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.எல்.எஸ்.லெட்சுமணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News