"வாழ நினைத்தால் வாழலாம்" புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "வாழ நினைத்தால் வாழலாம்" நூல் வெளியீடு நடைபெற்றது.

Update: 2021-07-12 06:33 GMT

புத்தகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட நூலாசிரியர் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அருகில் பாளை எம்எல்ஏ அப்துல்வஹாப், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம் உடனிருந்தனர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "வாழ நினைத்தால் வாழலாம்" என்ற சமூக நாவல் புத்தகத்தை, கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நூலாசிரியர் முன்னிலையில் வெளியிட்டார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் நூல் வெளியீடு நடந்தது. அருகில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

நாவலை பற்றி நூலாசிரியரிடம் கேட்ட போது,


இந்த சமூக நாவல் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் தடைகளைத் தாண்டி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டது என்றார். குடிபோதையில் இன்றைய இளைய தலைமுறையினர் பாதிக்கப்படும் விதம், குடியால் சீரழிந்த குடும்பத்தை ஒரு பெண் தன்னுடைய உழைப்பால் உயர்த்தும் விதம், குடியில் இருந்து மீட்டு அதன் பின்னர் பலருக்கும் மறுவாழ்வு கொடுக்கும் பேராசிரியர் ஒருவரின் வாழ்க்கை என பல சம்பவங்களை அழகாக விவரித்துள்ளது இந்நாவல்.

மது போதைக்கு அடிமையானவர்களை வெறுத்து ஒதுக்காமல் அவர்களுக்கு, மன நல மருத்துவமும், மருந்தும் கொடுத்து மீட்கும் குண சித்திரங்கள் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது . 

சில வருடங்களுக்கு முன்னர் தந்தையின் குடியால் பாதிக்கப்பட்ட சிறுவன், திருநெல்வேலி வண்ணார்பேட்டை இரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு இறந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அச் சிறுவன் எழுதிச் சென்ற கடிதம் என் கண்களை கலங்க வைத்தது. இப்படி பல சமூக சம்பவங்களை கண்ட நான், குடியில் இருந்து மீளும், மீட்கப்படும் சம்பவங்களை அடிப்படையாகக்  கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளேன் என்றார். 

Tags:    

Similar News