விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் லட்சக்கணக்கில் மோசடி; மக்கள் வேதனை

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உடைந்த குழாய்களால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-02 04:02 GMT

பைல் படம்.

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பல பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருவில் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

ஏற்கெனவே கொரானா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் கூறுகையில், பல முறை புகார் கூறியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. சுகாதார ஆய்வாளரில் தொடங்கி நகராட்சி கமிசனர் வரை எல்லாவற்றிலும் கமிஷன் அடிப்படையில் பணிபுரிவதே இதற்கு காரணம்.

குடிநீர் தேவைக்கு பயன்படுத்தபடும் மோட்டாரை விற்பனை செய்ததாகக் கூறி, ஒப்பந்ததாரருடன் சேர்ந்து பழைய மோட்டரை வர்ணம் பூசி புதிய மோட்டார் வாங்கியதாக லட்சகணக்கில் முறைகேடு செய்துள்ளனர்.

இப்படி முறைகேட்டையே முதல் வேலையாக செய்பவர்களுக்கு மக்கள் நலனில் அக்கரை இருக்க போவதில்லை. தமிழக அரசு உடனடியாக தலையீட்டு நோய்பரவும் காரணிகளையும் ஊழல் வாதிகளின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு, அதிகாரிகள் மீது தமிழக அரசு தான் முடிவு காண வேண்டும்.

Tags:    

Similar News