டான் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் லயன்ஸ் மாவட்ட கவர்னர் வருகை தினம் கொண்டாடப்பட்டது

டான் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் மாவட்ட கவர்னர் வருகை தினத்தை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Update: 2022-03-12 15:45 GMT

திருநெல்வேலி டாண் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் லயன்ஸ் மாவட்ட கவர்னர் வருகை தினம் சங்கத் தலைவர் வழக்கறிஞர் எம்.சி.ராஜன் தலைமையில் நெல்லை சரணாலயத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி டாண் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் லயன்ஸ் மாவட்ட கவர்னர் வருகை தினம் சங்கத் தலைவர் வழக்கறிஞர் எம்.சி.ராஜன் தலைமையில் நெல்லை சரணாலயத்தில் நடைபெற்றது.

சங்க செயலர் தேசிய நல்லாசிரியர் எஸ்.பொன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தி சங்க அறிக்கை வாசித்தார். லயன்ஸ் மாவட்ட கவர்னரை சாத்ராஜ் கோயில் தாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.லயன்ஸ் மாவட்ட கவர்னர் ஜெகநாதன் லயன்ஸ் சங்க செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கி சங்கத்தின் சேவை திட்டங்களான தையல் இயந்திரம், மருத்துவ, கல்வி உதவி, மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அரிசி, சேலைகளை வழங்கினார்.

கூட்டத்தில் சமூகத்தில் சிறப்பாக கல்வித்துறை, கோவிட் காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய சேவையாளர்கள், தமிழ்துறையில் சிறப்பாக பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், புகைப்பட கலைஞர், விலங்குகள் பராமரிப்பு மற்றும் தன்னலமற்ற சேவை புரிந்தவர்கள், மருத்துவர்கள் பலரையும் லயன்ஸ் மாவட்ட கவர்னர் ஜெகநாதன் பாராட்டி பொன்னாடை அணிவித்து சான்றிதழ்வழங்கினார்.

லயன்ஸ் மாவட்ட முதல் உதவி கவர்னர் என்.கே. விஸ்வநாதன் , இரண்டாம் துணை ஆளுநர் பிரான்ஸிஸ் ரவி, அமைச்சரவை செயலாளர் கேசவன், சுப்பையா, பொருளாளர் தினகரன், மண்டல தலைவர் பால சந்திரன், மாவட்ட தலைவர்கள், சங்கரன்கோவில் பி.அய்யாத்துரை, சொரிமுத்து, திருமலை முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் டாக்டர். பன்னீர் செல்வன், லயன்ஸ் சங்க விழாக்குழு தலைவர்கள் கதிரேசன், ரெங்கராஜன், சங்க இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், மீனாட்சி சுந்தரம், மந்திரம், சோமசுந்தரம், பீட்டர் பொன்னையா, காசிம், டாக்டர். நம்பிராஜன், கண்ணன், வசந்தா, விஜயபிரியா, ஆர்.குப்புசாமி ,டாண் சிட்டி லயன்ஸ் சங்க பட்டய தலைவர் மற்றும் பொருளாளர் எஸ்.வி ஜானகிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்தோணி நன்றி கூறினார். விழாவில் சரணாலய குழந்தைகளுக்கு டாக்டர் பன்னீர் செல்வன் சார்பில் வழங்கிய இரவு உணவை லயன்ஸ் கவர்னர் வழங்கினார்.

Tags:    

Similar News