திருநெல்வேலியில் காமராஜர் பிறந்த நாள்: அமைச்சர், எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

திருநெல்வேலியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அமைச்சர் பெரியகருப்பன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2021-07-15 17:22 GMT

நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியருப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை  அமைச்சர் பெரியகருப்பன், பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை-கணேசராஜா ஆகியோர் மாலை அணிவித்தனர்.தொடர்ந்து  பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News